இலங்கையில் தொழில் ஒப்பந்தங்களை முடிவுறுத்துதல்

By:

இலங்கையில் தொழில் ஒப்பந்தங்களை முடிவுறுத்துதல்

இலங்கையில் தொழில் முடிவுறுத்தலானது 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்கு சட்டம் மற்றும் 1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர் தொழில் முடிவுறுத்துதல்(சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் ஆகிய இரு பிரதான சட்டங்களில் மூலம் ஆளப்படுகிறது. இவ்விரு சட்டங்களையும் ஒன்றிணைத்து வாசிப்பதன் மூலம் தொழில் முடிவுறுத்துதலானது பின்வரும் சந்தர்ப்பங்களில் விண்ணப்பிக்கப்படுகிறது.

  1. ஊழியரின் சம்மதத்துடன் (இது பெரும்பாலும் இராஜினாமா செய்தல் எனும் வடிவத்தில்);
  2. தொழில் ஆணையாளரின் முற்கூட்டிய எழுத்துமூலமான அனுமதியுடன்(“COL”);
  3. நியாயப்படுத்தக் கூடிய காரணங்களுக்காக;

வேலை ஒப்பந்தங்களில் தொழிலை முடிவுறுத்துதல் அறிவித்தலுடன் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அவ் ஏற்பாடுகளின் கீழ் காரணம் ஏதுமின்றி தொழில்தருநரால் அவ்வாறு முடிவுறுத்துதல் செயற்படுத்தமுடியாத தொன்றாகவும் நியாயமற்ற முடிவுறுத்தலுக்கு சமமானதொன்றாகவும் இலங்கை நீதிமன்றங்களாலும் நியாயசபை கைகளாலும்..தீர்க்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தொழில் காரணம் ஏதுமின்றி முடிவுறுத்துதல் வழங்கப்பட்டாலும் இலங்கை நீதிமன்றம் மற்றும் நியாய சபைகளால் அவை செயற்படுத்தப்பட முடியாது.

காரணமில்லாத தொழில் முடிவுறுத்துதல்கள் மேற்குறித்த (a) அல்லது (b) என்பவற்றின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

மேற்காட்டப்பட்ட பிரிவு (a) இன் கீழ் பேச்சுவார்த்தைகள் செய்தல் மற்றும் ஊழியருடன் பரஸ்பர துண்டித்தல் உடன்படிக்கைகளை ஏற்படுத்துதல் என்பன விரும்பத்தக்க தெரிவாகும்.(எடுத்துக்காட்டாக ஊழியர் துண்டித்தல் ஒப்பந்தத்தின்படி ஒழுங்குபடுத்தப்படும் துண்டித்தல் தொகை வழங்கப்பட்டவுடன் தொழிலாளி அவன் அல்லது அவளது இராஜினாமா கடிதத்தை வழங்குவது) பிரிவு (a) இனை அடைய முடியாதுள்ளபோது , தொழிலாளர் தொழில் முடிவுறுத்துதல் சட்டத்தின்கீழ் ஊழியரின் தொழிலை முடிவுறுத்துவதற்கான தொழில் ஆணையாளரின் ஒப்புதலைப் பெறுவதற்காக , (b) தெரிவின் கீழ் தொழில் ஆணையாளருக்கு விண்ணப்பம் செய்யலாம்.அத்தகைய விண்ணப்பம் செய்வதற்கு 6 மாத காலத்திற்கு முன்னர் 15 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களை தொழில்தருநர் கொண்டிருக்க வேண்டும்.

காரணமில்லாத முடிவுறுத்துதலானது மேற்காட்டப்பட்ட பிரிவு (a) அல்லது (b) இன் கீழ் அமைய வேண்டும். முரண்பாடான சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் பரஸ்பர துண்டித்தல் ஆயத்தங்கள் எட்டப்படும்.

மேற்குறிப்பிட்ட பிரிவு (b) இன் கீழ் முடிவுறுத்தலுக்கான தொழில் ஆணையாளரின் ஒப்புகை நடப்பட்டுள்ள போது தொழில் தருநரால் ஏன் ஆவ்ஊழியர்(கள்) சேவையில் தொடர்ந்து அமர்த்தப்பட முடியாது என்பதனை நியாயப்படுத்தும் நிச்சயமான ஏதுக்கள் விளக்கப்படுதல் வேண்டும்.
அவ்வாறான நிச்சயமான எழுத்துக்கள் பெரும்பாலும் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

  1. அத்தொழில் செயற்பாடு அகற்றப்பட்டிருத்தல், பொதுவாக நிறுவன மறுசீரமைப்பு செயல்முறையின் போது மற்றும்/ அல்லது அத்தொழில்தருநரால் அத்தகைய தொழில் செய்முறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதிருத்தல்;
  2. தொழில்தருநரின் நிதி முடக்கீடு, விசேடமாக வியாபாரமானது மூடப்படும் அபாயத்தில் உள்ளபோது அத்தொழில் பிரிவை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத நிலை.

தொழில் ஆணையாளரால் அத்தகைய முடிவுறுத்தலுக்கான ஒப்புதல் வழங்கப்படும்போது முடிவுறுத்தல் சலுகைகள்/நட்ட ஈடுகள் என்பவை இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வர்த்தமானியில் காட்டப்பட்டுள்ள சூத்திரத்தின்படி வழங்கப்படவேண்டும்.

நிறுவன மறுசீரமைப்பின் காரணமான தொழில் முடிவுறுத்தல்

நிறுவன மறுசீரமைப்பின் காரணமான துண்டித்தல் அல்லது பணிநீக்க செயல்முறையானது மேற்குறிப்பிடப்பட்ட பிரிவு (b) இன் கீழ் செய்யப்படவேண்டும்.

தொழிலாளர் தொழில் முடிவுறுத்தல் சட்டத்தின் கீழ் தொழில் ஆணையாளருக்கு செய்யப்படும் விண்ணப்பத்திற்கு எவ்வித பரிந்துரைக்கப்பட்ட வடிவங்களும் இல்லை. எவ்வாறாயினும் எந்த அடிப்படையில் முடிவுறுத்தலுக்காக தொழில் ஆணையாளரின் ஒப்புதலை தொழில் தருநர் நாடியுள்ளாரோ அத்தகைய விண்ணப்பமானது (அவற்றை ஊர்ஜிதம் செய்யும் ஆவணங்களை முடியுமானவரை இணைக்கப்பட்டு) விளக்கமான தகவல்களை உள்ளடக்கி இருத்தல் வேண்டும். எவ்வாறாயினும் விண்ணப்பமானது இணைக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் அத்தியாவசியமான தகவல்களை ஆதரித்தல் வேண்டும். குறித்த விண்ணப்பத்தின் பிரதியொன்று பொருத்தமான ஊழியருக்கு வழங்கப்பட்டு அவ்விண்ணப்பம் தொழில் ஆணையாளரிடத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.தொழில் ஆணையாளர் விடயத்தை விசாரணை செய்கையில் தீர்வு எட்டப்படவில்லையெனில், விடயமானது தரப்பினர்கள் பரஸ்பரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட படி விளக்க முறையில் அல்லது ஆவண அடிப்படையில்/சத்தியக் கடதாசி வடிவில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அல்லது வேறு விதமாக தொழில் ஆணையாளரால் பணிக்கப்பட்ட விதத்தில் மேலதிக விசாரணைக்காக நியமிக்கப்படும். ஒவ்வொரு தரப்பினருக்கும் மற்றய தரப்பினரால் வழங்கப்பட்ட ஆவணங்களை அல்லது சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.

தொழில்தருநர் பணிநீக்கம் ஒன்றை செய்யமுற்படுகையில் தொழிலாளர் தொழில் முடிவுறுத்தல் சட்டத்தின் கீழ் தொழில் ஆணையாளரின் ஒப்புதலை நாடுதலானது இரண்டாவது சிறந்த தெரிவாக அமைகிறது.தொழிலாளர் தொழில் முடிவுறுத்தல் சட்டத்தின்கீழ் தொழில் ஆணையாளரின் கீழ் செய்யப்படும் ஒப்புதலுக்காக விண்ணப்பத்தின் முடிவானது அத்தகைய விண்ணப்பம் கிடைக்கப்பெற்று மூன்று மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தாலும், நடைமுறையில் இச்செயன்முறைக்கு குறிப்பிடத்தக்க அளவு காலம் செல்வதுடன் அந்நேரம் வரை தொழிலாளருக்கு தொழில்தருநர் கூலி வழங்குதல் அவசியமாகும். முடிவுறுத்தலுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டவுடன் தொழில் தருநரால் ஒப்புதல் வழங்கப்பட்ட நேரத்தில் காணப்படும் வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ள சூத்திரத்தின் படி நட்ட ஈடு வழங்குதல் அவசியமாகும். தொழிலாளரின் தொழில் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் (மறுசீரமைப்பு காரணத்தால்) தொழில் தருநர் ஒப்புதல் வழங்கப்படும் காலம்வரை, முடிவுறுத்தல் வர்த்தமானியின் படி கணக்கிடப்பட்ட நட்டஈடு கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக காலப்பகுதி வரையிலான கூலியும் வழங்கப்பட வேண்டும். இது பெரும்பாலும் தொழில் ஆணையாளரின் தலையீடு இல்லாத ,பரஸ்பர பேச்சுவார்த்தை மூலமான விதிமுறைகளை உள்ளடக்கிய துண்டிப்பினை உள்வாங்குவதைவிட நிதி சாத்தியமற்றது

முடிவுறுத்தலை செயற்படுத்துவதற்கான ஏனைய தெரிவுகள்

பிரிவு (a) இன் கீழான முடிவுறுத்தலானது பொதுவாக தொழில்தருநர் மற்றும் தொழிலாளி ஆகிய இருவரினாலும், பெரும்பாலும் முடிவுறுத்தல் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட அளவைவிட அதிக அளவில் நன்மை பயக்கும் துண்டிப்பு கொடுப்பனவு தொடர்பான விதிமுறைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை மூலம் இணக்கம் காணப்பட்ட தொழில் துண்டிப்பை உள்ளடக்கும். இது முற்றுமுழுதாக தொழிலாளர் மற்றும் தொழில்தருநர் ஆகிய இருவரினதும் விடயமாக இருப்பதுடன் இதில் எவ்வித சட்ட தலையீடுகளும் காணப்படமாட்டாது.

மீதமாயுள்ள முடிவுறுத்தலுக்கான தெரிவாக அமைவது மேற்குறிப்பிட்ட பிரிவு (c) இன்கீழான முடிவுறுத்தலாகும். பிரிவு (c) இன்கீழான முடிவுறுத்தலானது 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்கு சட்டத்தின் திருத்தத்தின்கீழ் தொழிலாளியினால் தொழில் நியாய சபையின் முன்னாள் சவாலுக்கு உட்படுத்தப்படக்கூடியது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அத்தகைய சூழ்நிலையில் அத்தகைய முடிவுறுத்துதலை நியாயப்படுத்துவதற்கு தொழில் தருநர் அழைக்கப்படுவார். இங்கு நியாயத்தை தீர்மானிப்பதற்கான பிரதான ஏதுவாக இருப்பது தொழில் தருநரின் நல்ல எண்ணம் ஆகும் அதாவது தொழில்தருநரால் ,தொழில் முடிவுறுத்தப்பட்ட தொழிலாளிக்கு தம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு போதுமான அளவு நியாயமான மற்றும் நடுநிலையான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்பதை நிரூபித்தல் வேண்டும்.தொழில் முடிவுறுத்தலானது ஒழுக்கம் சார்பற்ற அடிப்படையில் அமைந்திருக்கையில் ,தொழில் தருநரின் நல்லெண்ணமானது, இறுதியான முடிவுறுத்தல் படிமுறைக்கு செல்வதற்கு முன்னர் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதன் மூலம் நிரூபிக்கலாம். இங்கு முக்கியமானது யாதெனில் தொழிலை முடிவுறுத்துவதற்கான செயலானது தொழிலாளியினால் செய்யப்பட்ட மீறுகையுடன் தொடர்பு பட்டதாகவும் அதற்கு நிகரானதுமாக அமையவேண்டும் என்பதாகும்.

Disclaimer: This information is provided for general information purposes only and does not constitute legal advice. Readers should not rely on it as a substitute for specific legal advice in relation to any particular matter.

Share:
Share on linkedin
Share on facebook
Share on twitter

Consult Our Experts

Our expert team of partners and leading lawyers offer services across extensive practice areas and ensure our clients receive optimal legal advice. They have the capacity to handle everything from intricate cases to crucial disputes, providing top-tier solutions with unwavering dedication and expertise.