கொவிட் -19 உம் இலங்கையிலுள்ள தொழில்தருநர்கள் முகங்கொடுக்கும் தொடர்ச்சியான சவால்களும்

covid-19 and challenges for employers sinhala


முடக்கங்கள, ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் மெய்நிகர் „இடைநிறுத்தம்‟ மற்றும் அதன் விளைவாக வருமான உருவாக்கம் „இடைநிறுத்தப்பட்டு‟, இதன் விளைவாக எதிர்கால வருமானத்தில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படும் என்று எதிர்வுகூறப்படுவதால், குறைவான இயக்கசக்தி கொண்ட உலகளாவிய மற்றும் உள்நாடடு;ப் பொருளாதார ஒழுங்கிற்கு வெகுவிரைவில் முகங்கொடுக்க வேணடி;ய ஏற்படும். அதன் ஊழியப் படையினைத் தக்கவைத்துக்கொள்ளல் உள்ளடங்கலாக வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்கு முன் பல சவால்களை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்மிக்க மற்றும் கடினமான பணியைத் தொழில்தருநர்கள் எதிர்கொள்கின்றனர்.

வளர்ந்து வரும் சந்தைகளைக் கொண்ட பெரும்பாலான அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இலங்கை சட்டத்திலுளள் தொழிற் சட்டம் ஊழியர் சார்புடையதாகக் கருதப்படுகிறது.

'எந்தவொரு தொழிலினதும் காலமானது, வெளிப்படையான அல்லது மறைமுகமான மற்றும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், ஊழியருக்குக் குறைவான சாதகமாக நிலையைக்கொண்டிருக்கும் பட்சத்தில, ஊழியர் அல்லது தொழில் ஆணையாளரின் சம்மதமின்றி எந்தவொரு வகையிலும் மாற்றியமைக்கப்படவோ அல்லது மாறுபடவோ முடியாது”, மற்றும் ' ஊழியர் அல்லது தொழில் ஆணையாளரின் வெளிப்படையான ஒப்புதலுடன், வேலை இழப்புக்கான சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டை செலுத்துவதில் அடிப்படையிலன்றி, வேலை நிறுத்தப்படுவது ஒழுக்காற்று அடிப்படையில் ஒரு 'தண்டனையாக” என மட்டுமே அனுமதிக்கப்படும். ஆள்குறைப்பு, செலவுகுறைப்பு; மற்றும் மூடல் ஆகியவற்றின் நிலைமையும் இதுவாகும்” என்பது அடிப்படை சட்டக்கோட்பாடாகும்.

ஆகவே, கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் இக்கட்டான நிலை போன்ற அசாதாரணமான அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாக கட்டாய விடுமுறை அல்லது ஊதியக் குறைப்பு மற்றும் வேலை நிறுத்தப்படுவதை அனுமதிக்கும் வேறு எந்த சட்டமும் அல்லது சட்ட ஏற்பாடுகளும் இல்லாததால், தற்போதைய சூழலில் கடடு;ப்படுத்துவதாகத் தோன்றினாலும் தொழில்தருநர்கள் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளின் வரையரைகளுக்குள் பணியாற்ற வேண்டிய கடட்hயத்தில் உள்ளனர்.

பல்வேறு கொவிட்-19 பணிக்குழுக்கள் மூலம் இதுவரை செயல்படுத்தப்பட்ட அரசாங்கத்தின ; கொள்கைகள் வணிகத்தின் தொடர்ச்சியில் தொழில்தருநர்களுக்கு ஆதரவை வழங்குவதன் அவசியத்தை அங்கீகரிக்கின்றன. இந்த சூழலில், தொழில் ஆணையாளரால் சட்டமானது, ஒரு தொழில்தருநருக்கு விதிவிலக்கான மற்றும் கடட்hய சூழ்நிலைகள் குறித்து „நியாயமானதும் மற்றும் சமத்துவமானதுமான‟ கோட்பாடுகளில் நிருவகிக்கபபடும்; என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ஒருதலைப்பட்சமாக வேலைவாய்ப்பு விதிமுறைகளை குறைப்பதன் அடிப்படையில் ஒரு தொழில்தருநருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது, செயல்படுத்தப்பட விரும்பும் ஊதியக் குறைப்புக்கள் காரணமாக, தொழிலாளர் ஆணையாளரால் உத்தரவிடப்பட வாய்ப்பில்லை என்று நாங்கள் நம்புகிறோம். அத்தகைய நடவடிக்கையானது வெளிப்படையாக தீய எணணம் ; கொண்டதாக இல்லாது, ஒரு சமரச அணுகுமுறை மிகவும் பொருத்தமானதாக இருந்தாலும், ஒவ்வொரு சட்டமும் இவ்வாறு செயல்படுத்தப்படவில்லை.

மேலே குறிப்பிட்டுள்ளவாறு, பொதுச் சட்டமானது, „ஆள்குறைப்பு, செலவுக்குறைப்பு அல்லது மூடல் நிலைமை‟ ஆகியவற்றின் அடிப்படையில் வேலை நிறுத்தப்படுவதானது, ஊழியரின் முன் ஒப்புதல் அல்லது தொழில் ஆணையாளரின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதுடன், தேவையான இழப்பீ;டும் வழங்கப்பட வேணடு;ம் என்று கடட்hயப்படுத்துகின்றது. தொழில்தருநரால் கோரப்பட்ட பணிநீக்கத்தை அனுமதிப்பதில் „நியாயமான மற்றும் சமமான‟ கோட்பாடுகளைப் பிரயோகிக்கும் தற்றுணிபுடன் ;தொழில் ஆணையாளருக்கு எந்தவொரு இழப்பீட்டையும் தள்ளுபடி செய்யவோ அல்லது மாற்றவோ அதிகாரம் இல்லை. நிறுவன வளாகத்தில், கடட்மைக்கப்பட்ட அடிப்படையில் பணிநீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புடன், குறுகிய காலத்தில் ஒரு „கலப்பு மாதிரியை‟ பின்பற்றுவது பற்றித் தொழில்தருநர்கள் கருத்தில் கொள்ளலாம்.

இலங்கை சட்டமானது, பணியாளர்களுக்குக் கடட்hய விடுமுறை வழங்குதல் கோட்பாடு தொடர்பாக மௌனம் காப்பதுடன் இது பொதுவாகப் பின்பற்றப்டாததொரு நடைமுறையாகும். எவ்வாறாயினும், தற்போது நிலவும் கொவிட்-19 சூழ்நிலையில், அத்தகைய விருப்பமானது, ஒரு தொழில்தருநரால் கோரப்படலாகாது என நாம் நிராகரிக்க முடியாததுடன் அத்தகைய நிவாரணமானது மறுக்கப்படவும் வாய்ப்பில்லை.

மேலும், தொழில்தருநர் முகங்கொடுக்கும் கூடுதலான மற்றும் புதிய சவால்களை அறிந்துகொள்வதற்காக திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களது தலைமையிலான, “பணியிடங்களில் கொவிட் - 19 பரவுவதைத் தடுப்பதற்கான” விசேட செயலணியொன்றை திறன்கள் அபிவிருத்தி, வேலைவாயப்;பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு நியமித்துள்ளது. இலங்கை முதலாளிமார்களின் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இதன் இன்றியமையாத பாகமாகும். இயனற்ளவு விரைவில் வணிகங்களை நடாத்தும் மற்றும் இயங்கும் நோக்கத்தில் இது தொடர்பாக ஒரு குழுவை அமைக்குமாறு அனைத்து பணியிடங்களையும் அமைச்சு கோரியுள்ளது,.

கொவிட்-19 ஆனது வர்த்தகத்தில் ஏற்படுத்தும் மோசமான மற்றும் பாதகமான தாக்கத்தை உணர்ந்து ஆணையாளரால் சட்டம் பிரயோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், தவிர்க்க முடியாத உலகளாவிய பொருளாதார மந்தநிலையுடன் ஏற்கனவே அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் வணிகங்களை காப்பாற்றும்விதமாக, 'நியாயமான மற்றும் சமமான” கோட்பாடுகளைக ; கடைப்பிடித்து சட்டத்தை வளமாக நிர்வகிக்குமாறு ஆணையாளரிடம் கோரப்பட்டுள்ளது.


Related