வேலைசெய்யும் நேரம்
‘SOEA’ ஒழுங்குவிதிமுறையின் பிரகாரம் தொழிலில் பொதுவான நேரம் (ஓய்வு மற்றும் சாப்பாட்டு ஓய்வை தவிர்ந்த) கீழ்க் காணும் பிரகாரம் அமையும்.
- தினமொன்றுக்கு 8 மணித்தியாலங்களை அதிகரிக்காத காலம்
- வாரமொன்றுக்கு 45 மணித்தியாலங்களை அதிகரிக்காத காலம்
ஊழியர் ஒருவர் தொடர்ச்சியாக 04 மணித்தியாலங்கள் சேவையாற்றிய பின்னர் அரை (1/2) மணி நேரம் சாப்பாட்டுக்காக அல்லது ஓய்வுக்காக நேரம் ஒன்று பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் அது பொதுவாக தினம் ஒன்றுக்கு ஒரு மணித்தியாலம் சாப்பாடு மற்றும் ஓய்வுக்குரிய இளைப்பாறும் நேரமாகும். எந்தவொரு தினத்திலும் ஊழியர் ஐந்து மணித்தியாலங்களுக்கு அதிகமான காலம் சேவையில் ஈடுபடவில்லை என்றால் சாப்பாட்டுக்கான அல்லது ஓய்வுக்கான நேரமோ பெற அனுமதியில்லை.
ஆகையினால் ‘SOEA’ தேவைகள் மற்றும் ஒழுங்குவிதிமுறைகள் அலுவலகத்தில் அல்லது கடையில் நடமாடும் வியாபாரம் புரியும் நபர்களுக்கு பரிசோதகருக்கு மேற்பார்வையாளருக்கு முகாமையாளருக்கு அல்லது அதனுடன் தொடர்புடைய பிரிவில் சேவையாற்றுகின்ற நபர்களுக்கு உரித்தாகாது. அதன் பெறுபேறாக அவ்வாறான ஊழியர்களுக்கு ஏதேனும் மேலதிக நேரக் கொடுப்பனவு உரித்து வேண்டுகோள் செய்யப்படாமல் தினம் ஒன்றுக்கு எட்டு மணித்தியாலங்களை விட மற்றும் /அல்லது வாரமொன்றுக்கு 45 மணித்தியாலங்களுக்கு அதிகமான காலம் சேவையாற்ற நேரிடும். பொதுவாக எடுத்துக்கொண்டால் அந்த வரையறைகளை மீறி சேவையாற்றுகின்ற பெண்கள் ஆளணிக்காகவும்.
மேலதிக நேரக் கொடுப்பனவு:-
சேவையாற்றுவதற்காகவுள்ள மணித்தியாலங்களை தாண்டி சேவையாற்ற ஊழியருக்கு நேரிடும் சந்தர்ப்பங்களில் மேலதிக நேரக் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும். ‘SOEA’ ஒழுங்குவிதிமுறைகள் மேலதிக நேரக் கொடுப்பனவு வாரம் ஒன்றுக்கு 12 மணித்தியாலங்கள் மட்டுப்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த மட்டுப்படுத்தல் கடுமையாக அமுல்படுத்தப்படாது.
இதற்கு மேலதிகமாக செயற்படுத்தப்படும்போது நிருவாக பதவியணிக்கு சம்பளம் செலுத்தப்படுவது அவர்கள் சேவையாற்றிய மணித்தியாலங்களின் அடிப்படையில் இல்லை. தமது பதவிக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக என்பதனால் அவர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு செலுத்தப்படுவதில்லை.
உரிய சந்தர்ப்பங்களில் மேலதிக நேரக் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியது ஒரு மணித்தியால கட்டணத்தின் ஒன்றரை மணித்தியால அளவிலான் என்பதுடன் ஒரு மணித்தியாலத்திற்கு குறைவான காலத்திற்காக அளவுக்கமைய கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டும். மேலதிக நேரக் கொடுப்பனவுகள் கணக்கிடப்படும் முறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
- தினக் கட்டணம் செலுத்தல்
- தினம் ஒன்றின் சம்பளத்தில் 1/8
- மாதாந்தக் கட்டணம் செலுத்தல்
- மாதாந்த சம்பளத்தில் 1/8 அளவை 30 தால் வகுப்பதனால்
- இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செலுத்தல்
- இரண்டுவார சம்பளத்தில் 1/8அளவை 14 தால் வகுப்பதனால்.
- வாராந்தம் கட்டணம் செலுத்தல்
- ஒருவார சம்பளத்தில் 1/8அளவை 7தால் வகுப்பதனால்.
விடுமுறை தினங்கள் மற்றும் விடுமுறை சலுகைகள்
வார விடுமுறை நாட்கள்
‘SOEA’ ஒழுங்குவிதிமுறைகளின் பிரகாரம் ஏதேனும் வாரமொன்றின் 28 மணித்தியாலங்களுக்கு குறையாத காலம் சேவையாற்றுகின்ற ஊழியர் பதவியணியில் அங்கத்தவருக்கு அந்த வாரத்தில் அல்லது அடுத்துவரும் வாரங்களுள் ஒன்றரை நாட்கள் சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்பட வேண்டும். பொதுவாக அவ்வாறான வார விடுமுறை வழங்கப்படுவது சனிக்கிழமைக்கு அரை நாளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் என்றவகையிலாகும். பெரும்பாளான நிறுவனங்கள் சனிக்கிழமை நாளும் முழுநாள் விடுமுறை வழங்குவது பொதுவான விடயமாகும்.
எந்தவொரு வார விடுமுறை தினத்தில் சேவையாற்ற தேவைப்படுகின்ற எந்தவொரு ஊழியருக்கும் மேலே குறிப்பிடப்படுகின்ற மேலதிக நேரக் கொடுப்பனவின் அடிப்படையில் சேவையாற்ற அனுமதி வழங்கப்படும்.
சட்டப்பூர்வமான விடுமுறைகள்
அலுவலக மற்றும் கடை ஊழியர்களுக்கு எல்லா சட்டப்பூர்வமான விடுமுறை தினத்திலும் சம்பளத்துடனான விடுமுறை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. தற்காலத்தில் காணப்படும் அவ்வாறான விடுமுறைகளாவன.
- தமிழ் தைப்பொங்கல்
- தேசிய தினம்
- மீலாதுன் நபி ( நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினம்)
- சிங்களம் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம்
- சிங்களம் தமிழ் புத்தாண்டு தினம்
- மே தினம்
- வெசாக் முழு போயா தினத்திற்கு பிந்திய தினம்
- நத்தார் தினம்
போயா தினம் மற்றும் வர்த்தக விடுமுறை தினம்
பௌரணமி போயாத் தினத்தில் சகல ஊழியர்களுக்கு விடுமுறை பெற அனுமதி உண்டு. அவ்வாறாயினும் ஊழியருக்கு செலுத்தப்படுகின்ற அவரின் உரிய சம்பளத்தில் 1 1/2 தடவைக்கு குறைவான அளவு செலுத்தப்படும் பட்சத்தில் அவ்வாறான ஊழியரை சேவையில் ஈடுபடுத்த முடியும். வர்த்தக விடுமுறை தினம்மொன்று அல்லது போயா தினமொன்று சட்டப்பூர்வமான விடுமுறை தினத்தில் அல்லது முழுமையான அல்லது பாதி வார விடுமுறை தினத்தில் காணப்படும் பட்சத்தில் அதற்காக பதிலீட்டு விடுமுறையொன்று வழங்குவது தேவையில்லை.
வருடாந்த விடுமுறை/விடுமுறை
சேவையை பூர்த்திசெய்துள்ள ஒரு வருடத்திற்காக 14 நாட்கள் முழுமையான சம்பளமுடைய வருடாந்த விடுமுறை ஒன்று பெற்றுக்கொள்ள அலுவலக மற்றும் கடை ஊழியருக்கு அனுமதியுண்டு. தொடர்ச்சியான அடிப்படையில் ஏழு நாட்களுக்கு குறையாத நாட்கள் அனுமதி வழங்க வேண்டுமென ‘SOEA’ இனால் விதிக்கப்பட்டுள்ளது. முதலாவது வருடத்தில் சேவையாற்றுவதற்காக ஊழியருக்கு நியாயமான விடுமுறைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படுவதுடன் அது கீழ்க் காணும் வகையில் கணக்கிடப்படுகிறது.
- சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஜனவரி 1 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு பின்னர் மற்றும் ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் என்றால் 14 நாட்கள்
- சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் மற்றும் ஜுலை 1 ஆம் திகதிக்கு முன்னர் என்றால் 10 நாட்கள்
- சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஜுலை 1 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் மற்றும் ஒக்டோம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் என்றால் 7 நாட்கள்
- சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஒக்டோம்பர் 1 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் மற்றும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் என்றால் 4 நாட்கள்
வருடாந்த விடுமுறைகளை தவிர சகல பஞ்சாங்க வருடத்தில் அலுவலக மற்றும் கடை ஊழியருக்கும் ஏழு நாட்கள் அமைய விடுமுறை அனுமதி உண்டு. சேவையின் ஆரம்ப வருடத்தில் அமைய விடுமுறை ஒவ்வொரு இரண்டு மாத சேவைக்காகவும் ஒரு தினம் என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும்.
கட்டிட கைத்தொழில் துறை ஊழியர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியுமான உச்ச வருடாந்த விடுமுறைகளின் எண்ணிக்கை ஊழியர் சேவையாற்றிய ஒவ்வொரு 18 நாட்கள் அலகுக்கும் ஒரு விடுமுறை தினம் (உச்ச செயற்பாட்டு தினங்கள் 252) மற்றும் உச்ச எண்ணிக்கை 14 நாட்களாகும்.
பொறியியல் கைத்ததொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக அதிகூடிய விடுமுறைகள் 14 நாட்களும் அதில் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக பெறப்பட வேண்டும்.
பிரசவ விடுமுறை
‘SOEA’ இன் கீழ் பெண் ஊழியரின் முதலாவது குழந்தைப் பிரசவம் அல்லது பெண் ஊழியருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் சந்தர்ப்பத்தில் மற்றும் அவரின் இரண்டாவது குழந்தைப் பிரசவத்திற்காக பெண் ஊழியருக்கு சம்பளத்துடன் 84 நாட்கள் விடுமுறை பெற அனுமதி உண்டு. அவ்வாறான விடுமுறைகள் பிரசவத்திற்கு முன்னர் 14 நாட்களும் பிரசவத்திற்கு பின்னர் 70 நாட்களும் பெற முடியும்.
‘SOEA’ இன் கீழ் பெண் ஊழியரின் முதலாவது குழந்தைப் பிரசவம் அல்லது பெண் ஊழியருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் சந்தர்ப்பத்தில் மற்றும் அவரின் இரண்டாவது குழந்தைப் பிரசவத்திற்காக பெண் ஊழியருக்கு சம்பளத்துடன் 84 நாட்கள் விடுமுறை பெற அனுமதி உண்டு. அவ்வாறான விடுமுறைகள் பிரசவத்திற்கு முன்னர் 14 நாட்களும் பிரசவத்திற்கு பின்னர் 70 நாட்களும் பெற முடியும்.
ஏதும் பெண் ஊழியர் ஒருவர் அவரின் பிரசவ விடுமுறை காலத்தினுள் மரணமடைந்தால் கொடுப்பனவு செலுத்த வேண்டிய காலத்திற்காக விடுமுறை தினங்கள் கணக்கிடப்பட வேண்டியது வேலைசெய்யும் நாட்கள் 42 இற்கு என்பதுடன் அது பிரசவத்திற்கு முன்னர் 14 நாட்களும் பிரசவத்திற்கு பின்னர் 28 நாட்களும் என்பதாக அமைய வேண்டும்.
தமது பிரசவ காலத்தினுள் மரணமடைந்தால் சேவை கொடுனரினால் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியது மரணமடைந்த தினம் வரை மற்றும் மரணமடைந்த தினத்தையும் உள்ளடக்கியே ஆகும்.
‘SOEA’ இனால் உள்ளடக்கப்படாத ஊழியர்கள் 1932 ஆம் ஆண்டு 32ஆம் இலக்க தாய் பிரதிலாபங்கள் கட்டளைச் சட்டத்தினால் (MBO) உள்வாங்ககப்படுவார்கள்.
தாய் பிரதிலாபங்கள் கட்டளைச் சட்டத்தினால் (MBO) உள்வாங்ககப்படும் ஊழியர்களுக்காக முதலாவது மற்றும் இரண்டாவது குழந்தைகளுக்குரிய விடுமுறை உரித்தாவது ஒட்டுமொத்தமாக 12 வாரங்களாகும். (சேவையில் ஈடுபடாத நாட்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.)
மூன்றாவது குழந்தைக்கு அல்லது அடுத்த குழந்தைக்கு அல்லது மரணமடைந்த குழந்தைக்கு அல்லது இருக்கும் கர்ப்பத்திற்காக விடுமுறை உரித்து 06 வாரங்களாகும். (இதற்கிடையிலுள்ள சேவையாற்றாத நாட்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.) பிரசவ விடுமுறை காலத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் மரணமடைந்தால் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியது அவர் மரணமடைந்த தினம் வரை மற்றும் மரணமடைந்த தினத்தையும் உள்ளடக்கியே ஆகும்.
சேவையை நிறுவத்துவது:-
சேவையை நிறுத்தும்போது ஒரு தரப்பினால் அடுத்த தரப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவித்தல் அல்லது அவ்வாறான அறிவிப்புக்கு மாற்றீடாக ஒரு மாத சம்பளத்திற்கு சமமான பணத்தை அல்லது தொழில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் கீழ் அறிவிக்கப்படாமல் சேவையை நிறுத்துவது தொழில் ஒப்பந்தத்தின் சாதாரண தன்மையாக இருந்தாலும் காணப்படும் தொழில்/தொழிலாளர் சட்டத்தின் கீழ் கீழ்க் காணும் விடயங்களின்போது மட்டும் சேவையை நிறுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
தொழில் ஆணையாளரின் பூர்வாங்க எழுத்துமூல அங்கீகாரம் பெறப்பட்ட பின் குறித்த ஊழியரின் விருப்பத்திற்கமைய சேவையை நிறுத்துவதற்கான ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம் இருக்கும் போது
குறைந்த சம்பளம்-
2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் 2016 ஆம் ஆண்டு 03ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்த சம்பளச் சட்டத்தின் பிரகாரம் சகல ஊழியர்களுக்காக (கைத்தொழிற்சாலைகள் கருத்தில் கொள்ளப்படாது) குறைந்த மாதாந்த சம்பளம் இலங்கை ரூபாய் 10000 ஆகுவதுடன் குறைந்த நாளாந்த சம்பளம் இலங்கை ரூபாய் 400 ஆகும்.
ஊழியர் நட்டஈடு-
தனது தொழில் ஈடுபட்டிருக்கும் வேளையில் சுகயீனம்/காயம் ஏற்படுகின்ற ஊழியர்களுக்காக நட்டஈடுத் தொகை பெற்றுக்கொடுப்பதற்கு 1934 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க ஊழியர் நட்டஈட்டு கட்டளைச் சட்டத்தில் வசதிகளை செய்துள்ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஊழியரின் மரணம் ஏற்பட்டால் அவரில் தங்கியிருப்பவர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க ஊழியர் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செலுத்தப்பட வேண்டிய நட்டஈட்டுத் தொகையின் அளவு தொழிலாளர் நட்டஈட்டுத் தொகை கட்டளைச் சட்டத்தின் ஐஏ உப அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அது மதிப்பிடப்பட்டிருப்பது ஊழியரின் மரணம் / செயலிழப்பு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொண்டிருந்த மாதாந்த சம்பளத்தின் அடிப்படையிலாகும். கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகள் கீழ்க் கண்டவாறாகும்.
- மரணம் (கனிஷ்ட/மூத்த)
- நிரந்தர மற்றும் முழு செயலிழப்பு ( பாரிசவாதம் குருடு போன்ற)
- நிரந்தரமாக ஒரு பக்கம் செயலிழப்பு (கால் அல்லது அதில் ஒரு பகுதி இழப்பு செவிப்புலன் இழப்பு ஒரு கண்ணை இழத்தல் போன்றவை)
- தற்காலிகமான செயலிழப்பு ( ஒரு பகுதி அல்லது முழுமையாக)
தொழில் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் போது நட்டஈடு வழங்கப்படும். நட்டஈட்டுத் தொகையை தீர்மானிப்பது நோயின் தன்மை மற்றும் அது ஏற்பட்ட சூழமைவைக் கருத்தில் கொண்ட பின்னராகும்.
மேலே குறிப்பிடப்படும் இரண்டு சந்தர்ப்பத்திலும் ஏற்பட்டுள்ள நோய் / காயம் தொழில் மூலம் அல்லது தொழில் புரியும் சந்தர்ப்பத்தில் ஏறட்டதொன்றாக இருத்தல் வேண்டும். அது தொழில் நோய் என்றால் அது அவ்வாறான தொழிலில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக ஏற்பட்டதொன்றாக இருத்தல் வேண்டும்.
This is only an overview of the applicable law, and should not be relied upon as legal advice or recommendation by D. L. & F. De Saram, a leading law firm in Sri Lanka. If you require our advice, please be good enough to contact us on [email protected]