இலங்கையில் தொழிற்கள் பலவித சட்டங்கள் மற்றும் பிரமாணக் குறிப்புகள் மூலம் நிருவகிக்கப்படுகின்றன. 1954 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியா; (தொழில் மற்றும் ஊதியம் பற்றிய ஒழுங்குவிதிமுறை) சட்டம் ஏதேனும் கடை வீதியில் அல்லது ஒரு மாதத்திற்கு அல்லது அதற்கு குறைவான காலத்திற்கு புண்ணிய விடயம் ஒன்றுக்காக அல்லது வேறு விடயம் ஒன்றுக்காக அல்லது தொழில் அமைச்சரின் அங்கீகாரத்துடன் அதைவிட கூடுதலான காலத்திற்கான மரணக் கிரிகை விடயங்கள்இ பாடசாலைகளில் ஆசிரியா; ஆளணி அல்லது காவலாளிகளின் அல்லது பொறுப்பாளா;களின் வியாபாரம் ஒன்று தொடர்பானவை தவிர்ந்த இலங்கையில் சகல கடைகளில் மற்றும் அலுவலகங்களில் ஊழியா;கள் உள்ளடங்குவார்கள்.
சுட்டத்தின் கீழ் ஊழியா; ஒருவா; பலவகையிலான விடுமுறை தினங்களுக்கு தகைமை பெறுவார். ஆவையாவன:-
- வார விடுமுறை
- வருடாந்த விடுமுறை
- அமைய விடுமுறை (சுகயீன விடுமுறை)
- அரசாங்க விடுமுறை தினம்
- முழுப் பௌரணமி தினம்
- பிரசவ விடுமுறை
வார விடுமுறை
ஏதேனும் ஊழியா; ஒருவா; ஏதேனும் வாரமொன்றின் 28 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு கூடுதலான காலம் சேவையாற்றினால் அந்த நபருக்கு முழுமையான வேதனங்களுடன் ஒன்றரை தினங்கள் வார விடுமுறை பெற்றுக்கொள்ள உரித்து பெறுகின்றார் என்பதுடன் அந்தப் பணத்தை அந்த வாரத்திலேயே அல்லது அதனுடன் அடுத்துவரும் வாரத்தில் செலுத்தப்பட வேண்டும். பொதுவாக இவ்வாறான விடுமுறை வழங்கப்படுவது சனிக்கிழமை தினம் அரைநாள் ஆகவூம் ஞாயிற்றுக்கிழமை முழுநாள் ஆகவூமாகும். பெரும்பாளான நிறுவனங்கள் சனிக்கிழமை நாளும் முழுநாள் விடுமுறை வழங்குவது பொதுவான விடயமாகும்.
வருடாந்த விடுமுறை
சேவையை பூர்த்திசெய்கின்ற ஒவ்வொரு வருடத்திற்காக 14 நாட்கள் முழுமையான சம்பளமுடைய வருடாந்த விடுமுறை ஒன்று பெற்றுக்கொள்ள ஊழியருக்கு அனுமதியூண்டு. ஆகையினால் தொழிலல் முதலாவது வருடத்தில் ஊழியா;களுக்கு வருடாந்த விடுமுறை பெற உரித்து இல்லை. தொழிலில் இரண்டாவது வருடத்திற்காக வருடாந்த விடுமுறை உரித்தாவது ஊழியர் சேவைக்காக இணைந்துகொண்ட திகதியை அடிப்படையாகக் கொண்டாகும். உரித்தாகும் வருடாந்த விடுமுறை அளவூகள் கீழே தரப்பட்டுள்ளது.
- முந்திய வருடத்தின் ஜனவரி 01 திகதி தொடக்கம் மார்ச் 31 திகதி வரை -14 நாட்கள்
- முந்திய வருடத்தின் ஏப்ரல் 01 திகதி தொடக்கம் ஜுன்; 30 திகதி வரை -10 நாட்கள்
- முந்திய வருடத்தின் ஜுலை 01 திகதி தொடக்கம் செப்டம்பா; 30 திகதி வரை -07 நாட்கள்
- முந்திய வருடத்தின் ஒக்டோம்பா; 01 திகதி தொடக்கம் டிசம்பா; 31 திகதி வரை -04 நாட்கள்
அமைய விடுமுறைஃ சுகயீன விடுமுறை
இரண்டாவது வருடத்தில் இருந்து ஊழியா; அமைய விடுமுறை 07 நாட்கள் பெற உரித்து பெறுகிறார். தொழிலில் முதலாவது வருடத்தில் சேவையை பூர்த்திசெய்கின்ற ஒவ்வொரு முழுமையான இரண்டு மாதங்களுக்காகவூம் ஊழியருக்கு ஒரு நாள் அமைய விடுமுறை பெற உரித்து கிடைக்கின்றது.
சட்டப்பூர்வமான விடுமுறைகள்
சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அலுவலக மற்றும் கடை ஊழியா;களுக்கு கீழே குறிப்பிடப்படும் தினங்கள் அரசாங்க விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவை “வர்த்தக விடுமுறை தினம்” எனவூம் பொதுவாக அழைக்கப்படும்.
- தமிழ் தைப்பொங்கல்
- தேசிய சுதந்திர தினம்
- சிங்களம் தமிழ் புத்தாண்டு தினம்
- சிங்களம் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம்
- மே தினம்
- வெசாக் முழுப் பௌரணமி போயா தினத்திற்கு பிந்திய தினம்
- முகமத் நபி (ஸல்) அவா;களின் பிறந்த தினம் (மீலாதுன் நபி)
- நத்தார் தினம்
அரசாங்க விடுமுறை தினம் ஒன்றில் சேவையில் ஈடுபட தேவைப்படும் ஊழியா; ஒருவருக்கு நாளாந்த சம்பளத்தை போன்று இரண்டு மடங்கிற்கு குறையாத பணம் செலுத்தப்படுவதுடன் குறித்த வருடத்தில் டிசம்பா; 31 ஆம் திகதிக்கு முன்னா; எந்தவொரு தினத்திலும் பதிலீட்டு விடுமுறை தினம் ஒன்று வழங்கப்படும்.
முழுப் பௌரணமி போயா தின விடுமுறை
பௌரணமி போயாத் தினத்தில் ஊழியா;களுக்கு விடுமுறை வழங்கப்படும். முழுப்பௌரணமி தினம் தொடர்பாக ஒவ்வொரு வருடத்திலும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். அவ்வாறாயினும் போயா தினத்தில் சேவையில் ஈடுபட தேவைப்படும் ஊழியா; ஒருவருக்கு நாளாந்த சம்பளத்தை போன்று ஒன்றரை அளவூக்கு (1 1ஃ2) குறையாத பணம் செலுத்தப்படும்.
பிரசவ விடுமுறை
முதலாவது மற்றும் இரண்டாவது குழந்தைப் பிரசவத்திற்காக பெண் ஊழியருக்கு 84 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறை உரித்தாகும் என்பதுடன் அதற்கு குழந்தைப் பிரசவத்திற்கு முன்னா; 14 நாட்களும் பிரசவத்திற்கு பின்னா; 70 நாட்களும் உள்ளடங்கும். மூன்றாவது அல்லது அதற்கு பின்னரான குழந்தைப் பிரசவங்களுக்காக 42 நாட்கள் விடுமுறை உரித்தாகும். (இதற்கு குழந்தைப் பிரசவத்திற்கு முன்னா; 14 நாட்களும் பிரசவத்திற்கு பின்னா; 28 நாட்களும் உள்ளடங்கும்.) பிரசவ விடுமுறை கருத்தில் கொள்ளப்படுவது வார விடுமுறை தினங்கள்இ அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் முழுப் பௌரணமி தினங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படாதவாறாகும்.